மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

1579919658 9035
1579919658 9035

சுற்றுலா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 113 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

மென்செஸ்டரில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலாவதாக துடுப்பாடிய இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 9 விக்கட்டுக்களை இழந்து 469 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டது.

பின்னர் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 287 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனையடுத்து தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இங்கிலாந்து அணி 3 விக்கட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

பின்னர் 312 என்ற வெற்றியிலக்கை நோக்கி தமது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 198 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.

3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் இரண்டு அணிகளும் தலா 1க்கு 1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.