ஸ்கேட்டிங் வீராங்கனை ரஷ்யாவில் உயிரிழப்பு

GettyImages 893872736 e1595298025903
GettyImages 893872736 e1595298025903

ஸ்கேட்டிங் வீராங்கனை எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவ்ஸ்கியா ரஷ்யாவில் உயிரிழந்துள்ளார்.

20 வயதான அவர் 2018 குளிர்கால ஒலிம்பிக்கில் ஹார்லி விண்ட்சருடன் அவுஸ்திரேலியாவுக்காக விளையாடினார்.

ரஷ்யாவில் பிறந்த எகடெரினா 2018 ஆம் ஆண்டு தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அவுஸ்திரேலியா சார்பில் களமிறங்கி திறமையை வெளிப்படுத்தினார்.

அவுஸ்திரேலிய வீரர் ஹார்லி விண்ட்சருடன் இணைந்து 2017 ஆம் ஆண்டு ஜூனியர் பிரிவில் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் அவரது மரணம் குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.