மீண்டும் இணைந்தார் ஜொப்ரா ஆர்ச்சர்

england 620x330 1
england 620x330 1

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அவரிடம் இரண்டாவது முறையாகவும் முன்னெடுக்கப்பட்ட கொவிட்-19 சோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவரை இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் முதலாவது போட்டியில் விளையாடியதன் பின்னர் அணியின் சுகாதார வழிகாட்டலை மீறி தனது இல்லத்திற்கு சென்றிருந்தார்.

இதனையடுத்து அவர் 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுருந்ததுடன் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியிலும் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில், அவரிடம் இரண்டு முறை கொவிட்-19 சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு, அவருக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை டெஸ்ட் வீரர்ர்கள் தர வரிசைப்படுத்தலில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக் முதல் இடத்தில் உள்ளார்.இரண்டாம் இடத்தில் ஜேசன் ஹொல்டர் உள்ளார்.