இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

spt03
spt03

இங்கிலாந்துடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் மற்றும் இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் அணியின் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான அணியின் தலைமை அசார் அலியிடம் வழங்கப்பட்டுள்ளதோடு குறித்த தொடர் எதிர்வரும் 5ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, 3 போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 1ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் பாகிஸ்தான் அணி பங்குபற்றும் முதலாவது சர்வதேச கிரிக்கட் தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.