இன்னும் 100 விக்கெட்கள் வீழ்த்துவேன் – சாதனை படைத்த ஆண்டர்சன் உறுதி!

4 3

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 600 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ள நிலையில் இன்னும் 100 விக்கெட்கள் வீழ்த்துவேன் எனக் கூறியுள்ளார்.

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்ப்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் அதிகமான விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். இந்நிலையில் நேற்றைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ஆஜர் அலிகானை தனது 600 ஆவது விக்கெட்டாக வீழ்த்தி சாதனை படைத்தார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஆண்டர்சன் ‘ நான் ஆஷஸ் தொடரில் இருக்க வேண்டும் என பயிற்சியாளர் விரும்புகிறார். இப்போது என்னுடைய பந்துவீச்சைப் பார்க்கையில் என் திறமை வற்றிவிட வில்லை எனத் தெரிகிறது. என்னால் 700 விக்கெட்கள் வீழ்த்த முடியும்… ஏன் முடியாது?’ என உறுதி அளித்துள்ளார். தற்போது ஆண்டர்சனுக்கு 38 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.