பிரபல வீரருக்கு ஐ.பி.எல். தொடரில் விளையாட அனுமதி மறுப்பு!

Mustafizur rahman 696x398 1
Mustafizur rahman 696x398 1

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முஷ்டபிசுர் ரஹ்மானுக்கு, நடப்பு ஐ.பி.எல். தொடரில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹாரி கர்னி, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதனை காரணம் காட்டி சமீபத்தில் நடப்பு தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்தநிலையில் அவருக்கு மாற்றீடாக முஷ்டபிசுர் ரஹ்மானைத் தேர்வு செய்ய கொல்கத்தா அணி விரும்பியது. ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாட முஷ்டபிசுருக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அனுமதி மறுத்துள்ளது.

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பங்களாதேஷ் அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொளளவுள்ளது. இதன் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை விளக்கம் அளித்துள்ளது.