சுப்பர் ஓவரில் வெற்றியை சுவைத்தது டில்லி கப்பிட்டல்ஸ்

AI 0450 1
AI 0450 1

இறுதிப் பந்துவரை விறுவிறுப்பாகவும் பரப்பரப்பாகவும் இடம்பெற்ற ஆட்டத்தில் சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றது டில்லி கப்பிட்டல்ஸ்.

AI 0330
AI 0330

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் டில்லி கப்பிட்டல்ஸூம், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

AI 0450
AI 0450

முதலில் துடுப்பெடுத்தாடியது டில்லி கப்பிட்டல்ஸ் அணி. பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். இரண்டாவது ஓவரில் தவான் ஓட்டம் எதனையும் பெறாமலே ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஷா 5 ஓட்டங்களுடன் சமியின் பந்தில் ஜோர்டனிடம் பிடி கொடுத்து வெளியேறினார்.

RON 1086
RON 1086

அடுத்துவந்த ஹெட்மைரும் 7 ஓட்டங்களுடன் வெளியேற தொடராக விக்கெட்களை இழந்த டில்லி அணி தடுமாறியது. எனினும் அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் பொறுப்புணர்ந்து ஆடினர். இதனால் அணியின் ஓட்ட எண்ணிக்கை சீராக உயர ஆரம்பித்தது. எனினும் 86 ஓட்டங்களை அணி பெற்றிருந்தபோது ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார்.

RON 1264
RON 1264

எனினும் அடுத்துவந்த ஸ்ரோய்னிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3 சிக்ஸர்கள், 7 பௌண்டரிகளை விளாசிய அவர் 21 பந்துகளில் 53 ஓட்டங்களை எடுத்து ரன் அவுட் ஆனால்.

011
011

அடுத்து வந்தவர்கள் இரு இலக்க ஓட்டத்தைத் நெருங்காத நிலையில் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது டில்லி கப்பிட்டல்ஸ் அணி.

பஞ்சாப்பின் பந்து வீச்சில் மொஹமட் சமி 3 விக்கெட்களையும், கொட்ரெல் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது பஞ்சாப். கே.எல். ராகுல் மயங்க் அகர்வால் இணை தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.

ஓரளவுக்க சிறப்பான ஆரம்பம். 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து நைர் (1), பூரான் (0), மக்ஸ்வெல் (1), கான் (12) என்று எவரும் சோபிக்கவில்லை. எனினும் மறுமுனையில் மயங்க் அகர்வால் நிலைத்து நின்று ஆடினார்.

அவருக்கு கௌதம் மட்டும் சிறிது ஆறுதல் கொடுத்தார். அவரும் 20 ஓட்டங்களுடன் வெளியேறினார். சிறப்பாக ஆடிய மயங்க் அகர்வால் 89 ஓட்டங்களுடன் (4 சிக்ஸர்கள், 7 பௌண்டரிகள்) ஹெட்மைரிடம் பிடிகொடுத்து வெளியேறவே.

வெற்றிக்காகப் போராடிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 157 ஓட்டங்களை எடுக்கவே ஆட்டம் சமநிலையானது.

டில்லியின் பந்துவீச்சில் ரபாடா,  அஸ்வின், ஸ்ரொய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

இரு அணிகளும் சமமான ஓட்டங்களைப் பெற்றதால் சுப்பர் ஓவர் மூலம் வெற்றி யாருக்கு என்பதைத் தீர்மானிக்க முடிவாயிற்று.

ஆட்டத்தில் பஞ்சாப் அணி இரண்டாவதாக துடுப்பெடுத்தாடியமையால் சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாட வேண்டியேற்பட்டது.

தொடக்க வீரர்களான ராகுலும், பூரனும் துடுப்பெடுத்தாடினர்.

டில்லியின் சார்பில் அந்த ஒரு ஓவரையும் ரபாடா வீசினார்.

முதல் பந்தில் 2 ஓட்டங்களை எடுத்தனர். இரண்டாவது பந்து பவுன்சராகப் பாய்ந்தது. அதைத் தூக்கி அடிக்க முயன்ற ராகுல் ஆட்டமிழந்தார்.

மூன்றாவது வீரராக மக்ஸ்வெல் களமிறங்கினார். ஆனால், அடித்தாடும் முனையில் இருந்த பூரன் மூன்றாவது பந்தில் ‘போல்ட் அவுட்’ ஆனால். இதனால், பஞ்சாப் அணி 2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

3 ஓட்டங்கள் என்ற இலகு வெற்றி இலக்குடன் சுப்பர் ஓவரை எதிர்கொண்ட டில்லி அணிக்க ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர் துடுப்பெடுத்தாடினர்.

முதல் பந்தை எதிர்கொண்ட பந்த் ஓட்டம் எதனையும் எடுக்கவில்லை. அடுத்த பந்தை ஷமி அகலப்பந்தாக வீச வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலை உருவானது. அடுத்த பந்தில் பந்த் 2 ஓட்டங்கள் எடுக்கவே டிpல்லி அணி எளிதாக வெற்றி பெற்றது.

AI 0330 1
AI 0330 1

ஆட்டநாயகனாக மார்கஸ் ஸ்ரொய்னிஸ் தெரிவானார்.

RON 1086 1
RON 1086 1