20க்கு 20 தொடர்- சமரி அத்தப்பத்துவிற்கு பதிலாக சசிகலா சிறிவர்தன

pg32 4
pg32 4

நியுஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2 வது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.

பிரிஸ்பேனில் நடைபெற்று இந்த போட்டியில், நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய நியுஸிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில், 253 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 45.1 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

இதற்கிடையில் எதிர்வரும் நவம்பர் மாதம் டுபாயில் இடம்றெ உள்ள போட்டியில் இலங்கை அணி வீராங்கனை சமரி அத்தப்பத்துவிற்கு பதிலாக சசிகலா சிறிவர்தன விளையாடவார் என கூறப்பட்டுள்ளது.