கொல்கத்தாவை வீழ்த்தி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது கோலியின் அணி!

Capture copy 1
Capture copy 1

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி8 விக்கட்டுக்களால் அபார வெற்றி பெற்றுள்ளது .

ஐக்கிய அமீரகத்தின் அபுதாவியில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர்லீக்கின் 13வது தொடரின் 39வது போட்டி நேற்று( 21)கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும்றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையில் ஷேக் சயீத்மைதானத்தில் இடம் பெற்றது

குறித்த போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 மணியளவில் ஆரம்பமானது .

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் துடுப்பட்டத்தை தெரிவு செய்தலும் அந்த அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது

றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அணியின் பந்து வீச்சினை சமாளிக்கமுடியாமல் தடுமாறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனக்கு வழங்கப்பட் ட 20 பந்து பரிமாற்றங்களில் 8 இலக்கு கல்லை இழந்து வரும் 84 ஓட்ட ங்களை மாத்திரம் பெற்று கொண்டது

இந்த ஓட்டமானது நடப்பு இந்தியன் பிரீமியர்லீக் தொடரில் அணி ஒன்று பெற்ற அதி குறைந்த ஓட்டமாக பதிவாகியது

துடுப்பட்டத்தில் அந்த அணி சார்பில் ஈயின் மோர்கன் 30 ஓட்ட ங்களையும்,லாக்கி பெர்குசன் 12 ஓட்ட ங்களையும் அதிக படியாக பெற்றுக்கொடுத்தனர் .

பந்து வீச்சில் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அணியின்சார்பில் மொகமட் சிராஜ் 3 விக்கட்டுக்களையும் யுஸ்வேந்திர சாஹல்2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினார் .

பதிலுக்கு 85 என்கின்ற இலகுவான இலக்கு நோக்கி களமிறங்கிய றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அணி இரண்டு இலக்கினை இழந்து வெற்றி இலக்கினை அடைந்தது

துடுப்பட்டத்தில் அணி சார்பில் தேவதூத் பாடிக்கல் 25 ஓட்ட ங்களையும்,குர்கீரத் சிங்ஆட்ட மிழக்கது 21 ஓட்ட ங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் லாக்கி பெர்குசன்ஒரு இலக்கினை கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக மொகமட் சிராஜ்தெரிவானார்

இதேவேளை புள்ளிப்பட்டியலில் மும்பை அணியை பின்தள்ளிறோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அணி முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது