மும்பையிடம் மண்டியிட்டது டெல்லி கேப்பிட்டல் அணி!

Bumrah3110 750x430 1
Bumrah3110 750x430 1

13 ஆவது ipl தொடரின் 51 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிப்பெற்றுள்ளது.

இந்த போட்டி டெல்லி கேப்பிட்டல்மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே டுபாய் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியில் நனைய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது

இதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடியடெல்லி கேப்பிட்டல்அணியானது 9 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில், 111 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியன்ஸ் அணி 14.2 ஓவர்கள் நிறையில் இலகுவாக வெற்றியிலக்கை கடந்தது.

அதே சமயம் 13 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி ஒன்பது வெற்றிகளுடன் முதலாவது இடத்திலும் டெல்லி அணி ஏழு வெற்றிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது .