டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

1 2
1 2

ரோயல் ஜெலன்ஜர்ஸ் பெங்ளுர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் ஜெலன்ஜர்ஸ் பெங்ளுர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அந்த அணியின் தேவ்டுட் படிக்கல் 50 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்

பந்துவீச்சில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் என்ரிஜ் நோர்ட்ஜே 3 விக்கட்களை வீழ்த்தினார்.

தொடர்ந்து 153 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 19 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.

துடுப்பாட்டத்தில் அந்த அணியின் அஜின்கியா ரஹானே 60 ஓட்டங்களையும் ஷிகர் தவான் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் ரோயல் ஜெலன்ஜர்ஸ் பெங்ளுர் அணியின் ஷஹாஃபஷ் அஹமட் 2 விக்கட்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.