யாழ். துரையப்பா விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்யவுள்ளதாக கூறுகின்றார் நாமல்!

unnamed 13
unnamed 13

யாழ். துரையப்பா விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்யவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இன்று(09)தெரிவித்தார்.

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இன்று துரையப்பா விளையாட்டரங்கை பார்வையிட்டார்.

இதன்போது, அமைச்சர் விளையாட்டரங்கில் உடற்பயிற்சியிலும் ஈடுபட்டார்.

இதனையடுத்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துரையப்பா மைதானத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

துரையப்பா மைதானத்தில் உதை பந்தாட்டத்திற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தவுள்ளதாக நாமல் ராஜபக்ஸ கூறினார்.