தம்புள்ளை ஹோக்ஸ் அணியினை கொள்வனவு செய்யவுள்ள இந்திய பொலிவூட் நடிகர்!

download 17 1
download 17 1

லங்கா பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்கும் தம்புள்ளை ஹோக்ஸ் அணியினை இந்திய பொலிவூட் திரைப்பட நடிகரொருவருக்கு சொந்தமான நிறுவனமொன்று கொள்வனவு செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய பொலிவூட் நடிகரும் கோடீஸ்வர வர்த்தகருமான சச்சின் ஜோஷிக்கு சொந்தமான நிறுவனமொன்றே தம்புள்ளை ஹோக்ஸ் அணியை கொள்வனவு செய்துள்ளது.

தம்புள்ளை ஹோக்ஸ் அணியின் தலைவராக தசுன் சானக செயற்படுவதுடன் கார்லோஸ் பரத்வைட் மற்றும் சமித் பட்டேல் ஆகியோரும் அணியில் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை கண்டி டஸ்கர்ஸ் அணி அணியை இந்திய பொலிவூட் நடிகர் சல்மான் கானின் சகோதாரர்களான சலிம் கான் மற்றும் சொஹைல் கான் ஆகியோர் பெற்றுக் கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.