ஐ.சி.சியின் புதிய தலைவராக கிரேக் பார்க்லே தெரிவு

pic 2
pic 2

ஐசிசி தலைவர் பதவிக்கு கிரேக் பார்க்லே (Greg Barclay) இம்ரான் கவாஜா (Imran Khwaja )போட்டியிட்ட நிலையில், பார்க்லே வெற்றிபெற்றுள்ளார்.

ஐசிசி தலைவராக இருந்த சஷாங்க் மனோகர் கடந்த ஜூலை மாதம் பதவி விலகியதால் இடைக்கால தலைவராக இம்ரான் கவாஜா நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி போட்டியின்றி தெரிவு செய்யப்படுவார் எனத் தகவல் பரவிய நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை.

இறுதியாக இடைக்காலத் தலைவர் இம்ரான் கவாஜா மற்றும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரேக் பார்க்லே ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் மூன்று சுற்றுக்களாக நடைபெற்ற தேர்தலில் கிரேக் பார்க்லே வெற்றிபெற்றார்.