நியூஸிலாந்து ,மேற்கிந்தியதீவுகள் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியின் முதலாவது நாள் போட்டி நிறைவு!

glenn phillips56 1606639794
glenn phillips56 1606639794

நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது நாள் போட்டி நிறைவடைந்துள்ளது.

நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் தொடர் நியூஸிலாந்தின் ஹாமில்டன் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகிறது.

இதற்கமைய, இன்றைய நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பைத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி இன்றைய நாள் போட்டி நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 243 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

மேலும், போட்டி நிறைவில் நியூஸிலாந்து அணிக்காக துடுப்பெடுத்தாடிய கேன் வில்லியம்சன் 97 ஓட்டங்களுடனும்,ரோஸ் டெய்லர் 31 ஓட்டங்களுடனும் ஆட்டமிளக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், நியூஸிலாந்து அணி தொடரின் இரண்டாவது நாள் ஆட்டத்தை நாளை தொடர்வுள்ளது.

இன்று ஆரம்பமாகியுள்ள இந்தத் தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.