லங்கா பிரீமியர் லீக் தொடரில் முதலிடத்திற்கு முன்னேறியது யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி !

images 2
images 2

அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்ச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் இதுவரையான போட்டிகளின்அடிப்படையில் திசர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று உயர் நிகர ஓட்ட சராசரியையும் பெற்றுள்ளது.

மேலும், , தம்புள்ள வைகிங் அணி 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், கொழும்பு கிங்ஸ் அணி 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும்,கண்டி டஸ்கர்ஸ் அணி 2 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.

எனினும், இதுவரை எந்தவொரு போட்டியிலும் வெற்றி பெறாத நிலையில்,காலி கிளாடியேட்டர்ஸ் அணி, 5 ஆவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரில் இதுவரையான போட்டிகளின் அடிப்படையில் தனுஷ்க குணதிலக 206 ஓட்டங்களைப் பெற்று அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரரின் வரிசையில் முன்னணியில் உள்ளார்.

மேலும்,தசுன் ஷானக 197 ஓட்டங்களுடன் இரண்டாம் இடத்திலும், குஷால் மெண்டிஸ்188 ஓட்டங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

அத்துடன், முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரில் இதுவரையான போட்டிகளின் அடிப்படையில் நவீன்-உல்-ஹக் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பந்துவீச்சு வரிசையில் முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.