யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது கொழும்பு கிங்ஸ் அணி!

LPL
LPL

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில், யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் மற்றும் கொழும்பு கிங்ஸ் ஆகிய அணிகள் பரீட்சை நடத்தின.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்ற கொழும்பு கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது

இதன்படி முதலில் துடுப்பாடிய யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதேவேளை. 149 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு கிங்ஸ் அணி 19. 2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து இலக்கை கடந்து வெற்றி பெற்றது.