லாயிட் ஆஸ்டின் ஜோ பிடனால் பாதுகாப்பு அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்!

115929797 b7a63a72 679c 4a52 8634 15e1b88e59fe
115929797 b7a63a72 679c 4a52 8634 15e1b88e59fe

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தனது பாதுகாப்புச் செயலாளராக ஓய்வுபெற்ற (ஜெனரல்) லாயிட் ஆஸ்டினை தேர்வு செய்துள்ளார்.

லாயிட் ஆஸ்டின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் மத்திய கிழக்கில் அமெரிக்க படைகளை பார்வையிட்டவர் ஆவார்.

இதன் மூலம் அமெரிக்காவின் முதல் கருப்பின பாதுகாப்புச் செயலாளராக லாயிட் ஆஸ்டின் தேர்ந்தெடுக்கப்பட்டு, முன்னாள் பாதுகாப்புத் துறை அதிகாரியான மைக்கேல் ஃப்ளோர்னாயை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

67 வயதான ஆஸ்டின் மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, மத்திய ஆசியா மற்றும் தெற்காசியாவின் சில பகுதிகளில் அமெரிக்க இராணுவத்தை மேற்பார்வையிடும் மத்திய கட்டளைக்கு தலைமை தாங்கிய முதல் கருப்பின அமெரிக்கர் என்பதும் குறிப்பட்டத்தக்கது.