100 தினங்களில் 100 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

Joe biden USA 23062020
Joe biden USA 23062020

அமெரிக்காவில் 100 தினங்களில் 100 மில்லியன் கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அவர் பதவி ஏற்று முதல் ஒரு மாதக்காலத்துக்குள் கொவிட் 19 நோய் கட்டுப்படுத்தி நிறைவு செய்யப்பட மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தம்மால் இந்த நோய்ப்பரவலை முழுமையாக தடுக்க முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

2021 ஜனவரி 20க்குப் பிறகு அமெரிக்காவில் இயங்கவுள்ள சுகாதாரத்துறை அலுவலர்களை அறிமுகம் செய்து உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, பிரித்தானியவைத் தொடர்ந்து அமெரிக்காவும் பைசர் மற்றும் பயோ என் டெக் தடுப்பூசியை அங்கீகரிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.