கொரோனாவின் தாக்கத்தினால் ரஷ்யாவில் 45ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

80826 RUS200606RUSSIACOVIDAP 1591603280526 720x450 1
80826 RUS200606RUSSIACOVIDAP 1591603280526 720x450 1

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், மொத்தமாக இதுவரை 45ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் இதுவரை 45ஆயிரத்து 280பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை மொத்தமாக 25இலட்சத்து 69ஆயிரத்து 126பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ரஷ்யாவில் 27ஆயிரத்து 927பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, 562பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நான்கு இலட்சத்து 90ஆயிரத்து 177பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர ரஷ்யாவில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 20இலட்சத்து 33ஆயிரத்து 669பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.