பிரெக்ஸிட் வர்த்தக பேச்சுவார்த்தைகளை நீட்டிக்க ஒப்புதல்!

2372001080955495007 4886277
2372001080955495007 4886277

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் பிரெக்ஸிட் வர்த்தக பேச்சுவார்த்தைகளை ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

பிரஸ்ஸல்ஸில் பல மணிநேரம் நீடித்த கலந்துரையாடல்களுக்குப் பிறகு, இரு தரப்பினரும் புதன்கிழமை மாலை தாங்கள் முக்கிய விடயங்களில் வெகு தொலைவில் இருந்ததாகவும், பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் குறித்த முடிவு இந்த வார இறுதிக்குள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் டிசம்பர் 31 ஆம் திகதி பிரெக்ஸிட் ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்னர் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பட முயற்சித்து வருகின்றன.

இதற்காக இந்த வார தொடக்கத்தில், ஜோன்சன் மற்றும் வான் டெர் லேயன் ஆகியோரின் கூட்டு அறிக்கை மூன்று “முக்கியமான” உறவுகளை மேற்கோள் காட்டியது.

இந் நிலையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான இறுதி முயற்சியானது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருக்கும் புதன்கிழமை நீண்ட நேரம் இடம்பெற்றது.

பேச்சுவார்த்தைகளின் பின்னர் இது தொடர்பில் கருத்து தெரிவித்த வான் டெர் லேயன்,

“நிலுவையில் உள்ள விடயங்கள் குறித்து நாங்கள் ஒரு உற்சாகமான மற்றும் சுவாரஸ்யமான கலந்துரையாடலை மேற்கொண்டோம். ஒருவருக்கொருவர் நிலைப்பாடுகளைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெற்றோம். அவை வெகு தொலைவில் உள்ளன. இந்த அத்தியாவசிய சிக்கல்களைத் தீர்க்க அணிகள் உடனடியாக மறுசீரமைக்க வேண்டும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம்” எனக் கூறியுள்ளார்.