சுசன் ரைசிற்கு ஜோபைடன் வழங்கியுள்ள முக்கிய பதவி

susan rice1 300x169 1
susan rice1 300x169 1

அமெரிக்காவின் ஐக்கியநாடுகளிற்கான முன்னாள் தூதுவர் சுசன் ரைசினை வெள்ளை மாளிகையின் உள்நாட்டு கொள்கை பேரவையின் இயக்குநராக ஜோ பைடன் நியமித்துள்ளார்.

சுசன் ரைஸ் பராக்ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு கொள்கை ஆலோசகராகவும், ஐக்கிய நாடுகளிற்கான தூதுவராகவும் பணியாற்றியுள்ளார். சுசன் ரைஸ் ஜோபைடனுடன் இணைந்து பணியாற்றியிந்தார். அவரை பைடன் துணை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கலாம் என ஊகங்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையிலேயே புதிய ஜனாதிபதியாக தெரிவிவு செய்யப்பட்டுள்ள ஜோபைடன் சுசன் ரைசிற்கு புதிய பதவியை வழங்கியுள்ளார்.

வெள்ளை மாளிகையின் உள்நாட்டு கொள்கை பேரவையின் இயக்குநராக அவரை நியமித்துள்ளதன் மூலம் குடிவரவு சுகாதாரம்,இனரீதியிலான சமத்துவமின்மை போன்றவை குறித்த கொள்கைகளில் முக்கிய பங்களிப்பை செய்யும் பொறுப்பினை ரைசிற்கு பைடன் வழங்கியுள்ளார்.