சர்வதேச ரீதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF 2
202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF 2

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஏழு கோடியை கடந்துள்ளது.

தற்போது வரையில் 7 கோடியே 6 லட்சத்து 81 ஆயிரத்து 512 பேருக்கு தொற்றுறுதியாகி உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் கொரோனா தொற்றினால் உலகளவில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 87 ஆயிரத்து 462 ஆக அதிகரித்துள்ளது.

4 கோடியே 91 இலட்சத்து 29 ஆயிரத்து 280 பேர் சர்வதேச ரீதியில் கொரோனா நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.