கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்தது ரஷ்யா!

106898215 hi053857203
106898215 hi053857203

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ரஷ்யா சோதனை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்புத்துறை விடுத்துள்ள அறிக்கையில், விலாடிமிர் மோனோமாக் (Vladimir Monomakh ) என்ற நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை செய்ததாகத் தெரிவித்துள்ளது.

பசிபிக் கடலில் புலாவா என்று என்று பெயரிடப்பட்ட ஏவுகணைகளை சோதனை செய்ததாகவும், இவை குறிப்பிட்ட இலக்கை குறிதவறாமல் தாக்கியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடலுக்கு அடியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கும் வல்லமை கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.