கனடாவின் முன்னாள்பிரதமர் முல்ரோனியின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்!

Brian Mulroney
Brian Mulroney

அவசர அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட கனடாவின் முன்னாள் பிரதமர் பிரையன் முல்ரோனி (Brian Mulroney) மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார்.

81 வயதான முல்ரோனியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஒன்றாரியோவின் போக்குவரத்து அமைச்சராக இருக்கும் அவரது மகள் கரோலின் முல்ரோனி, தன்னுடைய அப்பா உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.

இப்போது வீட்டில் ஓய்வெடுக்கிறார் என்று கூறினார். அவரைப் பற்றி விசாரித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்