சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

02b4bcc8 76c03994 corona world min 850x460 acf cropped
02b4bcc8 76c03994 corona world min 850x460 acf cropped

உலகளவில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.31 கோடியைக் கடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனாத் தொற்றுப் பாதிப்பிலிருந்து இதுவரை 5.12 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 16.27 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொற்று பரவியவர்களில் 2.02 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.06 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.