அமெரிக்காவில் பெரும் பனிப்புயல்!

201901131136577127 1 USStorm. L styvpf
201901131136577127 1 USStorm. L styvpf

அமெரிக்காவில் பனிப்புயல் ஒன்று அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியைத் தாக்கியதில், பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த புயல் கொலராடோவிலிருந்து மைனே மாநிலம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 14 மாநிலங்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

சில இடங்களில் இரண்டு அடி (60 செ.மீ) பனிப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் கடந்த குளிர்காலத்தில் பார்த்ததை விட அதிக பனி பொழியும் சாத்தியம் இருப்பதாக தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கிளின்டன் கவுண்டியில் உள்ள இன்டர்ஸ்டேட் 80 நெடுஞ்சாலையில் பல கார் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து பென்சில்வேனியாவில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

30 தொடக்கம் 60 வாகனங்கள் இடையே ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்ததுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நியூயார்க் மேயர் பில் டி பிளேசியோ, பல ஆண்டுகளில் நகரம் கண்ட மிகப்பெரிய புயலாக இருக்கலாம்.”இதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அவர் குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளார்.

நகரம் முழுவதும் உள்ள பாடசாலைகள் இணைய கற்றலுக்கு மாறிவிட்டன, வெளிப்புற உணவு இடைநிறுத்தப்பட்டுள்ளது மற்றும் நகரத்தில் படகு வழிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் புயலின் பாதையில் இருப்பவர்கள் ஆபத்தான சூழ்நிலையில் வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

1,300 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல மாநிலங்களில்ரயில் மற்றும் வீதிப்போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நியூயோர்க், பென்சில்வேனியா, கனெக்டிகட் மற்றும் மேரிலாந்து உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை தளங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைசர் – பயோஎன்டெக் தடுப்பூசியை வைத்தியசாலைகளுக்கு வழங்குவதில் புயலின் எந்தவொரு தாக்கத்தையும் அவர்கள் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.