இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்- விமான போக்குவரத்தை நிறுத்திய வெளிநாடுகள்!

vikatan 2020 04 f45d074e b3e4 4275 a972 d0d1cf3882dd Coronavirus research 2
vikatan 2020 04 f45d074e b3e4 4275 a972 d0d1cf3882dd Coronavirus research 2

பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் கொரோனா வைரஸில் புதிய வகை வேகமாகப் பரவிவருகிறது. வளர்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் நேற்று இரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது. புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பிரட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளும் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு தடைவிதித்துள்ளன.

கனடா அரசு முதற்கட்டமாக 3 நாட்களுக்கு பிரிட்டனுக்கான விமான போக்குவரத்தை நிறுத்தி உள்ளது. பல்வேறு நாடுகள் பிரிட்டனுடனான தரைவழி எல்லையை மூடிவிட்டன.

தென் அமெரிக்காவில், அர்ஜென்டினா, சிலி மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் பிரிட்டனில் இருந்து புறப்படும் மற்றும் பிரிட்டன் செல்லும் நேரடி விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன. ஈக்வடார் நாடும், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பரிசீலித்து வருகிறது.