புதிய வகை வைரஸ் தொற்றுடன் லெபனானில் ஒருவர் அடையாளம்!

download 1 20
download 1 20

ஐரோப்பிய நாடுகளில் பரவிவரும் புதியவகை வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் லெபனானில் அடையாளங் காணப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து நேற்று லெபனானுக்கு வருகைதந்துள்ள நபர் ஒருவருக்கு இவ்வாறு தொற்று உறதிப்படுத்தப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 21 ஆம் திகதி பிரித்தானியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணித்தவர்களின் குடும்பத்தினரை தனிமைப்படுத்தலுக்குட்படுத்துமாறு லெபனான் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.