அமெரிக்காவில் மைக்கேல் ஜாக்சனின் பண்ணை வீடு 22 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை!

b53d1ba1965696d1175212c08bfb6a1fec neverland ranch lede.rsocial.w1200
b53d1ba1965696d1175212c08bfb6a1fec neverland ranch lede.rsocial.w1200

பாப் இசை உலகின் அரசன் என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர் மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் அளவுக்கு அதிகமான போதைப்பொருள் எடுத்துக்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மைக்கேல் ஜாக்சனுக்கு அமெரிக்காவில் ஏராளமான சொத்துகள் உள்ளன. அதில் கலிபோர்னியாவில் உள்ள நெவர்லேண்ட் பண்ணை வீடும் ஒன்று. சுமார் 2,700 ஏக்கர் பரப்புடைய இந்தப் பண்ணை வீட்டை கடந்த 1987 ஆம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் வாங்கினார். கடந்த 2005 ஆம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் இந்தப் பண்ணை வீட்டில் வைத்து 13 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்தார். மேலும் தன் மீது வழக்கு தொடரப்பட்ட நாள் முதல் மைக்கேல் ஜாக்சன் நெவர்லேண்ட் பண்ணை வீட்டுக்கு செல்வதை தவிர்த்தார். எனினும் 4 மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கில் மைக்கேல் ஜாக்சன் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகும் அவர் நெவர்லேண்ட் பண்ணை வீட்டுக்கு செல்லவே இல்லை.

இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சன் இறந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய நெவர்லேண்ட் பண்ணை வீடு தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் நண்பரானா ரான் புர்கிளே என்ற ரியல் எஸ்டேட் அதிபர் இந்த பண்ணை வீட்டை 22 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியுள்ளார்.