தலைக்கேறிய டிக் டொக் மோகம்!

tiktok
tiktok

டிக்டொக் என்பது ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட ஒலிக்கு ஏற்ப நமது உடல் அசைவுகள் மூலம் காணொளி காட்சியாக்க உதவும் ஒரு திறன் பேசி மென்பொருள் கருவி. சுமார் 15 வினாடிகள் அளவில் பதிவு செய்து பிறருக்கும் பகிர்ந்து கொள்ளலாம்.

டிக்டொக் மூலம் பலரது சிந்தனை ஆ ற்றல் மற்றும் நடிப்பு திறன்கள் வெளிப்படுவதுடன் அவ்வாறானவர்கள் பாதகமான பல்வேறு விளைவுகளையும் எதிர்நோக்குகின்றனர்.

இந்தியாவின் மதுரையைச் சேர்ந்த இரு பெண்களும் டிக்டொக்கில் தோன்றி, நடிப்பு திறமையை வெளிக்காட்டுபவர்கள். 25 வயதுடைய இருவருமே கல்யாணமானவர்கள். இவர்கள் இருவருமே இப்படி டிக்டொக்கிலேயே விழுந்து கிடப்பதால், கணவன்மார்கள் இவர்களை விட்டு பிரிந்துவிட்டனர். இதனால் இந்த பெண்கள் அவரவர் அம்மா வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மாலாவிற்கு தேனியைச் சேர்ந்த 26 வயதுடைய சுகந்தி என்ற பெண்ணின் நட்பு கிடைத்தது.

சுகந்தியின் டிக் டொக் வீடியோக்கள் வித்தியாசமானது. தனக்கு நிறைய லைக்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தன்னுடைய காதலனுடன் செய்யும் சேட்டைகள், நெருக்கங்களையும் டிக் டொக்கில் பதிவிட்டு வந்துள்ளார்.

இதை பிடிக்காத மாலா சுகந்தியுடன் நட்பை துண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுகந்தி, இரு தோழிகளின் மானத்தை வாங்க முடிவு செய்தார்.

அதன்படி இருவரினதும் டிக் டொக் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, இருவரையும் விபச்சாரிகளாக சித்தரித்து, வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார் சுகந்தி. இதை கண்டு இரு பெண்களின் குடும்பத்தினரும் அதிர்ந்தனர்.

இதையடுத்து இரு பெண்களும் பொலிஸில் புகார் செய்யவும், தேனி பெண்ணையும், அவரது காதலனையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க அவர்கள் இருவரும் சேர்ந்து முன் ஜாமீன் பெற்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து, சுகந்தியிடம் இருந்த 2 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு பல பெண்கள் தமது குடும்ப வாழ்க்கை, பெற்றோரின் கௌரவத்தினை பற்றி சிந்திக்காது இளம் பெண்களும், கல்யாணமாகிய குடும்ப பெண்களும் டிக்டொக்கில் விழுந்து கிடப்பது மிக வேதனையாகவுள்ளது.