பிரேஸில் துணை ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

116274567 aaa 1 720x450 1
116274567 aaa 1 720x450 1

பிரேஸில் துணை ஜனாதிபதி ஹாமில்டன் மவுரோவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

67 வயதான ஹாமில்டன் மவுரோவுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா உறுதியாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர் ஜபுரோவில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் தம்மை தாமே தனிமைபடுத்தி கொண்டிருப்பதாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேஸில் ஜனாதிபதி போல்சலனரோ கடந்த ஜூலை மாதம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சையில் குணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

212 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிரேஸில், தொற்றுகள் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்குப் பின்னால் மூன்றாவது மோசமான நாடாக உள்ளது.

நாட்டில் கிட்டத்தட்ட 7.5 மில்லியன் மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 191,000க்கும் அதிகமானோர் இந்த நோயால் இறந்துள்ளனர். 6.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மீண்டுள்ளனர்.