அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்கள் எங்கள் அணியில் உள்ளனர்-ஜோ பைடன்!

vikatan 2020 08 f7d3697d 7c38 4f90 9d4a f1e16774d3fb AP20233129688112
vikatan 2020 08 f7d3697d 7c38 4f90 9d4a f1e16774d3fb AP20233129688112

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பை வீழ்த்திய ஜோ பைடன், தனது நிர்வாகக் குழுக்களை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந் நிலையில் வெள்ளைமாளிகையின் டிஜிட்டல் வியூகத்தின் உறுப்பினர்களை அவர் நேற்றையதினம் அறிவித்தார்.

மாறுபட்ட நிபுணர்களினால் உருவாக்கப்பட்ட இந்தக் குழு டிஜிட்டல் மூலோபாயத்தில் பலவிதமான அனுபவங்களைக் கொண்டுள்ளதுடன் புதுமையான வழிகளில் வெள்ளை மாளிகையை அமெரிக்க மக்களுடன் இணைக்க உதவுவார்கள் எனவும், எம் தேசத்தை சிறப்பாகக் கட்டியெழுப்புவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்கள் எங்கள் அணியில் உள்ளனர் என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன் எனவும் கூறியுள்ளார்.