சீன அரசின் நடவடிக்கையால் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள பிரபல தொழிலதிபர்

vikatan 2020 12 159b19e2 93f5 42ab 9a0b f28eb3b760f8 WhatsApp Image 2020 12 24 at 5 05 43 PM
vikatan 2020 12 159b19e2 93f5 42ab 9a0b f28eb3b760f8 WhatsApp Image 2020 12 24 at 5 05 43 PM

சீன அரசின் நடவடிக்கையால், பிரபல தொழிலதிபர் ஜாக் மாவின் (Jack Ma)அலிபாபா குழுமம், நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது.

ஜாக் மாவின் அலிபாபா குழுமம், போட்டியாளர்களை ஒழித்து ஏகபோகமாக, செயற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், வேகமாக வளர்ந்து வரும் அலிபாபா நிறுவனத்தின் ஆன்ட் குரூப் ஐபிஓ-வை கடந்த நவம்பர் மாதம், சீன அரசு தடை செய்துள்ளது.

சீன அரசின் இத் தடையால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு, அலிபாபாவின் ஆன்ட் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஜாக் மா, ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் பின்தங்கியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன், சீன அரசின் பைனான்சியல் ஆய்வு அமைப்பை, முதியவர்களின் கூடாரம் என, ஜாக் மா விமர்சனம் செய்த நாள் முதலே, அலிபாபாவுக்கு நெருக்கடிகள் தொடர்கின்றன என்பதும் குறிப்பிடத்தகக்து.