78 இலட்சத்தைக் கடந்த பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை!

202008060206578145 Corona virus that infects the heart medical experts shock SECVPF
202008060206578145 Corona virus that infects the heart medical experts shock SECVPF

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது.

பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அங்கு வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 78 இலட்சத்தைக் கடந்துள்ளது.

ஒரே நாளில் 1100 க்கும் அதிகமானோர் பலியான நிலையில் அங்கு கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 97 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 69 இலட்சத்தைக் கடந்துள்ளது. சுமார் 6.49 இலட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.