கோத்தபாய காந்திக்கு மாலைஅணிவிக்கூடாது!!

seeman
seeman

ஈழத்தில் 2 லட்சம் தமிழரை துள்ள துடிக்க படுகொலை செய்த கோத்தபாய ராஜபக்சவை டெல்லியில் காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு அனுமதிக்க கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிப்பது என்பது தேசிய அவமானம் என தனது கண்டனத்தினை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இரண்டரை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த கோட்டாபய ராஜபக்சவை மத்தியில் ஆளும் பாஜக அரசு விருந்தினராக இந்தியாவிற்கு அழைத்திருப்பது எட்டுகோடி தமிழ் மக்களையும் மொத்தமாய் அவமதிப்பதாகும்.

அரசுமுறைப் பயணமென்று கூறப்பட்டாலும் இது முழுக்க முழுக்க சிங்கள இனவாத அரசு நிகழ்த்திய இனப்படுகொலை குறித்து எவ்வித சர்வதேச அழுத்தமும் வராத வண்ணம் தடுக்கும் இந்திய அரசின் காய்நகர்த்தலே என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

இனப்படுகொலை செய்திட்ட கோட்டாபய ராஜபக்சவை இந்திய அரசு விருந்தினராக ஏற்றுக் கொண்டாடுவது அப்பட்டமான தமிழர் விரோதப் போக்காகும். இந்திய எல்லையில் தலைநீட்டி அத்துமீற முயன்றுக் கொண்டிருக்கிற சீன அரசினுடைய கைக்கூலியான கோட்டாபய ராஜபக்சவை இந்தியா ஏற்பது இந்நாட்டின் இறையாண்மைக்கே பேராபத்தாய் முடியும்.

அன்பையும், அகிம்சையையும், சமாதானத்தையும் போதித்த அண்ணல் காந்தியடிகளின் சிலைக்குக் கோட்டாபய ராஜபக்ச மாலை அணிவிக்கவிருப்பதாக வந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இரண்டு இலட்சம் தமிழர்களைத் துள்ளத் துடித்த படுகொலை செய்திட்ட ஒரு கொடுங்கோலன், அன்பையும், அகிம்சையையும் போதித்த ஒரு பெருமகனின் சிலைக்கு மாலை அணிவிப்பது எங்கும் நடந்திராத பெருங்கொடுமை.

இது அண்ணல் காந்திக்குச் செய்கிற அவமரியாதை, ஒட்டுமொத்த நாட்டிற்கே ஏற்பட்டிருக்கிற இழுக்கு, தேசிய அவமானம். எட்டுகோடித் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பெற்ற தமிழக அரசு இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் இத்தகைய பாராமுகமும், இன விரோதப்போக்கும் தொடருமானால் வருங்கால தமிழ்த்தலைமுறை பிள்ளைகளிடத்தில் இந்திய உணர்வே மொத்தமாய் பட்டுப்போகும் என எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.