பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ள பிரித்தானிய பிரதமர்

11
11

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளார்.
பொரிஸ் ஜோன்சனின் கொன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஃபிலிப் லீ எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு மாறியுள்ளார்.
இதையடுத்து ஆளும் கட்சியான கொன்சர்வேடிவ் கட்சி தனக்கிருந்த பெரும்பான்மையையும் இழந்துள்ளது.
கொன்சர்வேடிவ் கட்சி முன்பு போல் இல்லை எனவும், அரசியல் சூழ்ச்சிகளும் பொய்களும் நிறைந்ததாக மாறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிக்கு தாவிய ஃபிலிப் லீ குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் விவகாரத்தில் கென்சர்வேடிவ் கட்சியின் நிலைப்பாடு மக்களுக்கு ஆபத்தானது எனவும் லீ கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான காலக்கெடுவை நீடிக்க கோரும் பேச்சுக்கே இடமில்லை என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.