ட்ரம்ப்புக்கு ஈரான் கொலை மிரட்டல்!

donaldtrump 768x432 1
donaldtrump 768x432 1

அமெரிக்க  ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியாற்றிய நாட்களில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பல்வேறு பிரச்சனைகள் நிலவி வந்தன.

குறிப்பாக ஈரானின் இராணுவத் தளபதி காசிம் சுலைமானியை ட்ரோன் தாக்குதல் நடத்தி அமெரிக்கா கடந்த ஆண்டு கொலை செய்தது.

இதற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தலைவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.இதனால் இருநாடுகளுக்கும் இடையே  மோதல் போக்கு காணப்பட்டது.

இந் நிலையில் அமெரிக்க தேர்தலில் தோல்வியடைந்து ட்ரம்ப் வொஷிங்டனை விட்டு வெளியேறி இருக்கும் இச் சூழ்நிலையில் ஈரான் தலைவர் வெளியிட்டிருக்கும் டுவீட்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த டுவிட்டர் பதிவில் இது குறித்து அவர் வெளியிட்ட புகைப்படத்தில் ட்ரோன் விமானத்தின் நிழலில் ஒருவர் கோல்ஃப் விளையாடுவதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளது.

trump 1

மேலும் சுலைமானியை கொலை செய்த கொலையாளியும் அதற்கு உத்தரவு வழங்கிய நபரும் நிச்சயம் எதிர் வினைகளை சந்திக்க வேண்டும். எந்த நேரத்திலும் பழிவாங்குதல் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால், புகைப்படத்தில் இருப்பவர் ட்ரம்ப் எனவும் அவரை பழிவாங்க ஈரான் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த புகைப்படத்தை நீக்கிய டுவிட்டர் நிர்வாகம் அவரது கணக்கையும் முடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.