மீண்டும் போர்த்துக்கலின் ஜனாதிபதியானார் மார்சிலோ ரெபெலோ

Marcelo Rebelo de Sousa
Marcelo Rebelo de Sousa

கொரோனாத் தொற்றின் நெருக்கடிக்கு மத்தியிலும் போர்த்துக்கலில் நேற்று முன்தினம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.

இத் தேர்தலில் தற்போதைய  ஜனாதிபதியான மார்சிலோ ரெபெலோ டிசோசா (Marcelo Rebelo de Sousa) மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார்.

அந்தவகையில் சமீபத்திய தேர்தல்களில் இல்லாத வகையில் 40 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவானதாகக் கூறப்படுகின்றது.

மேலும் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து நேற்று காலை முடிவுகள் வெளிவரத் தொடங்கின.அதன்படி ஜனாதிபதி மார்சிலோ ரெபெலோ டிசோசா 61.5 சதவீத வாக்குகளை பெற்று தேர்தல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் தொடர்ந்து 2ஆவது முறையாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் ஜனாதிபதியாக இருப்பார்.