கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை ஏற்றுமதி செய்வதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் கவலை

WHO 300x182 1
WHO 300x182 1
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களிற்கு ஐரோப்பிய  ஒன்றியம் ஏற்றுமதி தடையை விதித்துள்ளமை குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது.

கொவிட் தடுப்பூசி தேசியவாதம் காரணமாக சர்வதேச ஒத்துழைப்பின் மீதான நம்பிக்கையை நாங்கள் இழந்தால் கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து மீள்வது தொடர்பில் நாங்கள் விலையை செலுத்தவேண்டியிருக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

பல வர்த்தகங்கள் சர்வதேச விநியோகத்தினை அடிப்படையாக கொண்ட வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எங்கள் உலகளாவிய  கிராமத்தில் வைரஸ் தொடர்ந்தும் நீடித்தால் சர்வதேச விநியோகங்கள் பாதிக்கப்படும் பொருளாதார மீட்சியும் பாதிக்கப்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் மருந்துகளை  ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

எங்கள் மக்களின் பாதுகாப்பே எங்களின் முன்னுரிமைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் நாங்கள் எதிர்கொண்டுள்ள சவால்களை கருத்தில் கொள்ளும்போது இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியதை தவிர தெரிவுகள் எம்முன் இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த கட்டுப்பாடுகள் அமெரிக்கா பிரிட்டன் கனடா உட்பட பல நாடுகளை பாதிக்கவுள்ளன.
எனினும் பல உலக நாடுகளிற்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இது தற்காலிக நடவடிக்கை  நிரந்தர தடையில்லை என தெரிவித்துள்ளது