அமெரிக்காவில் அதிகரிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை

big 165616 Coronavirus 1 4
big 165616 Coronavirus 1 4

அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 703 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 70 இலட்சத்து 27 ஆயிரத்து 347 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் மூவாயிரத்து 632 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 57 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது