ஜேர்மனில் இடம்பெற்று வரும் போரிலிருந்து விலகுவதற்கு அமெரிக்கா தீர்மானம்!

1612516258 1435417 hirunews
1612516258 1435417 hirunews

ஜேர்மனில் இடம்பெற்று வரும் உள்நாட்டு போரில் இருந்து விலகுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்றைய தினம் நிகழ்த்திய தமது வெளியுறவு கொள்கையில் இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆறு ஆண்டுகால யுத்தத்தால் பேரழிவிற்குள்ளான ஜேர்மனில் உள்ள அதன் நட்பு நாடுகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கான ஆதரவு விலக்கி கொள்ளப்படவுள்ளது.

இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜேர்மன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த யுத்தம் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபிய தலைமையிலான கூட்டணி போரில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கு அமெரிக்க இராணுவமும் ஆதரவு வழங்கியது.

இந்த உள்நாட்டு யுத்தத்தால் சுமார் ஒரு லட்சத்து 10,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

அத்துடன் ஜேர்மனில் மில்லியன் கணக்கான மக்கள் உணவின்றி தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான யுத்த நடவடிக்கையில் இருந்து அமெரிக்க இராணுவத்தின் ஆதரவை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.