தமிழர் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் அவுஸ்திரேலியாவில் திரண்ட மக்கள்!

625.0.560.320.310.730.053.800.670.160.90 1
625.0.560.320.310.730.053.800.670.160.90 1

இலங்கையில் நடை பெற்றுவரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அவுஸ்ரேலியா மெல்பே◌ார்ன் நகரில் இன்று புலம்பெயர் தமிழ் மக்கள் கூடி எதிர்ப்புகளை வெளிக்காட்டினர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்,

சிங்கள பேரினவாத அரசு கடந்த 73 ஆண்டுகளாக தமிழர்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இனவழிப்பிற்கு எதிராகவே இப்போராட்டம் அமைந்திருந்தது.

தொடர்ந்து தமிழர் நிலங்கள் சூறையாடப்பட்டு சிங்கள குடியேற்றங்களை அமைத்து தமிழர் பூர்வீக நிலங்களும், பண்பாடுகளும் திட்டமிட்டு சிதைக்கப்பட்டு வருகிறது. தற்போதைய புதிய இனவாத அரசு இதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

தொடர்ந்து தமிழர் எம் இருப்பினை தக்க வைத்திட போராட வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.

தமிழருக்கான நீதி கிடைக்கும் வரை இலங்கையின் சுதந்திர தினம் என்பது கரி நாளாகவே கருதப்பட முடியும். இதன் ஒருகட்டமாக இலங்கையில் நடைபெற்றுவரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான போராட்டத்திற்கு எமது ஆதரவுகள் இருக்கும்.

எனவே இதனை இங்கை சுதந்திர தின நாள் தமிழர்களுக்கெதிரான அடக்குமுறை நாளாக இனிவரும் காலங்களிலும் கருதி் எதிர்பலைகளை வெளிகாட்டி எம் இனத்திற்கான நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவோம்.

ஜனநாயகம் பண்புகளை ஏற்று மதிக்கும் நாம் ஜனநாயமிக்கதானதொரு நீதியை சர்வதேச சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கின்றோம் என அவர்கள் தெரிவித்தனர்.