இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து105 இலட்சத்து 22ஆயிரத்து601 பேர்குணமடைவு!

7d2d07ce recovered 1
7d2d07ce recovered 1

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து­­­ வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 108 இலட்சத்தை தாண்டியது. 105 இலட் சம் பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அதே சமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக் கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தமாக 108 இலட்சத்து 26  ஆயிரத்து 363 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 105 இலட்சத்து 22  ஆயிரத்து 601 பேர் குணமடைந்துள்ளனர், 1 இலட்சத்து 48 ஆயிரத்து 766 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1, 54,996 ஆக உயர்ந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.