அரசியல்வாதிகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரு நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ராஜினாமா

250px LocationPeru.svg copy
250px LocationPeru.svg copy

அரசியல்வாதிகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரு நாட்டின் வெளிவிவகார அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சீனாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சினோபார்ம் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை பெரு நாட்டின் அரசாங்கத்தின் முக்கிய நபர்கள் இரகசியமாக செலுத்திக் கொண்டமை தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்ட சுகாதார தரப்பினருக்கு முன்னதாக, அரசியல்வாதிகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பதவி விலகியுள்ளார்.

இதேவேளை, இரகசியமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவரையும் தமது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.