சீனர்களுக்கு 629 பாகிஸ்தான் பெண்கள் விற்பனை!!

pakistan 1
pakistan 1

பணத்திற்காக பாகிஸ்தானிய ஏழைப் பெண்களை சீனர்களுக்கு திருமணம் செய்து வைத்ததன் பின்னர் அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

சீனாவுக்கு அழைத்து செல்லப்படும் பெண்கள் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தங்களை மீட்குமாறு கெஞ்சுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெண்கள் திருமணமாகி சீனாவுக்கு கடத்தப்படுவதை தடுக்க பாகிஸ்தான் அதிகாரிகள் புலன் விசாரணை மேற்கொண்டனர். இதில் 629 பெண்கள் சீனர்களுக்கு திருமணம் செய்யப்பட்டு கடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இந்த விசாரணைகளால் சீனாவுடனான நட்புறவில் பாதிப்பு ஏற்படும் என்று பாகிஸ்தான் அரசு அஞ்சுகிறது.

இதையடுத்து இது தொடர்பான விசாரணைகளுக்கு பாகிஸ்தான் அரசு முட்டுக்கட்டை போட்டு வருவதாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படும் சீனர்கள் பலர் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.