உலகின் மிகப்பெரிய விளையாட்டு மைதானம்

ahmathabath
ahmathabath

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கட் விளையாட்டு மைதானத்தினை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

1982ம் ஆண்டு அகமதாபாத்தில் உள்ள மொதேராவில் சர்தார்பட்டேல் விளையாட்டு மைதானம் கட்டப்பட்டது. விளையாட்டு மைதானத்தை இடித்து 63 ஏக்கர் பரப்பளவில் புதிய ஸ்டேடியம் கட்டும்பணி நடந்து வருகிறது.

அகமதாபாத்தில் உள்ள இந்த கிரிக்கெட் மைதானம் உலகின் மிகப்பெரிய விளையாட்டு மைதானமாக கருதப்படுகிறது. இந்த மைதானம் 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமரலாம். இதனால் இது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இது கருதப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானம் தான் இதற்கு முன்பு பெரிய மைதானமாக இருந்தது. அங்கு 90 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கைகள் உள்ளன.

இந்த மைதானத்தில் தொடக்க ஆட்டமாக ஆசிய பதினொருவர்- உலக பதினொருவர் அணிகள் மோதும் காட்சி போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான அனுமதியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இருந்து கிடைக்கப்பெறும் பட்சத்தில் குறித்த போட்டியினை மார்ச் மாதமளவில் நடாத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.