லடாக்கின் கால்வான் மோதலின் போது உயிரிழந்தவர்களின் பெயரை வெளிப்படுத்தியது சீனா

202009110832503788 India China hold Brigade Commanderlevel talks in eastern SECVPF 1
202009110832503788 India China hold Brigade Commanderlevel talks in eastern SECVPF 1

லடாக்கின் கால்வான் மோதலின் போது உயிரிழப்புகளை சீனா இறுதியாக ஒப்புக் கொண்டது, 4 பி.எல்.ஏ வீரர்களின் பெயரை வெளிப்படுத்துகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களுடனான எல்லை மோதலில் உயிரழந்த நான்கு மக்கள் விடுதலை இராணுவ (பி.எல்.ஏ) வீரர்களின் விவரங்களை சீனா பெயரிட்டு பகிர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கால்வானில் நடந்த வன்முறை மோதலில் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை வெளியிட சீனா முன்பு மறுத்துவிட்டது.

இந் நிலையில் சீனாவின் மத்திய இராணுவ ஆணையகத்தின் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மேற்கொள் காட்டி, ஐந்து சீன எல்லை அதிகாரிகள் மற்றும் வீரர்களை இந்தியாவுடனான எல்லை மோதலில் உயிரிழந்துள்ளதாக குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை சீன ஊடகங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை குறித்த மோதலில் சென் ஹாங்ஜுன், சென் சியாங்ராங், சியாவோ சியுவான் மற்றும் வாங் ஜுயோரன் ஆகியோர் வெளிநாட்டு படையினருக்கு எதிரான கடுமையான போராட்டத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சென் ஹொங்ஜுனின் உயிரிழப்பின் பின்னர் சிறப்பு பட்டம் வழங்கப்பட்டதாகவும் மற்ற மூன்று பேருக்கும் முதல் தர தகுதி மேற்கோள்கள் வழங்கப்பட்டதாகவும் ரொய்ட்டர்ஸ் மேலும் கூறியுள்ளது.

இந்த மோதலில் உயிரிழந்த சீன அதிகாரிகளின் பெயரையும் விவரங்களையும் சீனா பகிர்ந்தது இதுவே முதல் முறை.

கால்வான் பள்ளத்தாக்கு மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், சீனா தனது உயிரிழப்பு எண்ணிக்கையை வெளியிடவில்லை மற்றும் கிழக்கு லடாக்கில் நேருக்கு நேர் பி.எல்.ஏ வீரர்கள் கொல்லப்பட்டதாக வெளியான செய்திகளை “போலி செய்தி” என்று குறிப்பிட்டனர்.

கால்வானில் நடந்த வன்முறை மோதலானது கிட்டத்தட்ட 45 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான மிக மோசமான எல்லை மோதலாகக் கூறப்பட்டது.