ஈக்குவாடோரிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல்களில் பலர் உயிரிழப்பு

19c92d5d0bcd40158d3ba8c87c0e65f8 18 720x380 1
19c92d5d0bcd40158d3ba8c87c0e65f8 18 720x380 1

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவாடோரிலுள்ள மூன்று சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல்களில் 50 க்கும் மேற்பட்டோர் மரணித்ததாக அந்த நாட்டு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

தற்போது சிறைச்சாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைகளுக்குள் உள்ள குழுக்களுக்கு இடையில் இவ்வாறு மோதல் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி சிறைகைதிகள் கொல்லப்பட்டமைக்கான காணொளிகள் வெளியாகியுள்ளன.

அந்த நாட்டு ஊடக தகவல்களின்படி, சிறைச்சாலை அதிகாரிகளை அங்குள்ள கைதிகள் பிணை கைதிகளாக வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது,

இதற்கிடையில் சிறையிலுள்ள கைதிகளின் உறவினர்கள் குறித்த பகுதிகளில் கூடியுள்ளனர்.

இந்த நிலையில் சிறைச்சாலைகளுக்குள் ஒரே நேரத்தில் வன்முறை செயற்பாடுகள் இடம்பெற்றிருப்பதாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் ஈக்குவாடோர் ஜனாதிபதி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.