நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்!

202007120530495024 Tamil News Earthquake in Philippinws SECVPF
202007120530495024 Tamil News Earthquake in Philippinws SECVPF

நியூசிலாந்தின் கிழக்கு பகுதியில், ஆக்லாந்து நகரில் இருந்து சுமார் 256 மைல்கள் தொலைவில் இன்று (உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.27 மணி) கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கடியில் 94 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகாக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. இதனால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதியைச் சுற்றி 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதனால் நியூசிலாந்து கடற்கரை பகுதிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

பசிபிக் நெருப்பு வளையம் எனப்படும் பூகம்ப அபாய பகுதியில் நியூசிலாந்து அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.